கிரிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வக்களிக்க மாட்டார்கள் என்ற நிலை மாறியுள்ளது - முதல்வர்

By Velmurugan s  |  First Published Mar 25, 2024, 12:19 PM IST

கிரிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்ற நிலை புதுச்சேரியில் மாறி உள்ளதாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் புதுச்சேரி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் புதுச்சேரி தலைவரும்,  முதலமைச்சருமான ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, வேட்பாளர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஆன்மிகமும், அரசியலும் பிரிக்கக் கூடாதவை; மருதாச்சல அடிகளாரிடம் ஆசிபெற்ற பின் அண்ணாமலை பேட்டி

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மத்தியில் பிரதமராக மோடி தான் மீண்டும் வரப்போகிறார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கும் போது நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும். புதுச்சேரியில் கூட்டணி கட்சி சார்பில் யார் வேட்பாளராக இருக்க வேண்டும் என கேள்வி எழுந்த போது  அனைவருக்கும் நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும், அப்படி தான் நமது வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். 

நமது வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றால் புதுச்சேரியிக்கு ஒரு மத்திய அமைச்சர் வேண்டும் என உரிமையுடன் நாம்  கேட்கலாம். கடந்த முறை வெற்றி வாய்ப்பை விட்டுவிட்டோம். அதை இந்தமுறை பிடிக்க வேண்டும். சிறுபான்மையினர் வாக்கு நமது கூட்டணிக்கு கிடைக்காது என்பதெல்லாம் இப்போது இல்லை. மத்திய அரசின் உதவியுடன் அனைத்து திட்டங்களையும், கடந்த தேர்தலின் போது நாம் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றி வருகிறோம். 

தேர்வுக்கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடமே கொள்ளையடிப்பதா? சுந்தரனார் பல்கலை.க்கு எதிராக அன்புமணி ஆவேசம்

நமக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுத்து வருகிறது. நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக செல்லும் போது அந்த நிதி கூடுதலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை ஒரு முக்கிய தொகுதியாக மத்திய அரசு எண்ணுகிறது. எனவே நாம் இணைந்து பணியாற்றி நமது வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும். கிரிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்ற நிலை புதுச்சேரியில் மாறி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

click me!