புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செயப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா பிறப்பித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் பாஜக தலைவராக சாமிநாதன் இருந்து வந்த நிலையில், அவர் மாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செயப்பட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பாஜக எம்.பி.யான செல்வகணபதியை புதுச்சேரி பாஜக தலைவராக அக்கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அண்மைக்காலமாகவே இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக தலைவர் மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் நியமன எம்எல்ஏவும், கல்வியாளருமான செல்வகணபதி பாஜக மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. அதற்காக அமைப்பு, நிர்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்களை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், புதுச்சேரி பாஜக தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.