சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியர் வல்லவனை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆளும் கட்சி ஆதரவு எம். எல். ஏ, கல்யாணசுந்தரம் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன் ஆகிய இருவரும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு காலையில் 9 மணி அளவில் வருகை புரிந்தனர்.
அப்போது சட்டசபைக்கு வந்த காலாப்பட்டு தொகுதி ஆளுங்கட்சி ஆதரவு பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம், மற்றும் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் ஆகிய இருவரும் சட்டமன்றத்தில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆளுங்கட்சி ஆதரவு பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் கூறும்போது, ஆட்சி அமைந்து மூன்று வருடமாக உள்ள நிலையில் இதுவரை எந்த தொகுதியிலும் ஒருவருக்கு கூட இலவச மனை பட்டா வழங்கப்படவில்லை. காலாப்பட்டு தொகுதியில் மீனவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். கடல் அரிப்பால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சனாதன தர்மத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் - உதயநிதி நம்பிக்கை
சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் கிழக்கு கடற்கரை சாலையே இல்லாத நிலை ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறை, கலால் துறை, உள்ளாட்சித் துறை, மாவட்ட நிர்வாகம், மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆகிய பொறுப்புகளை கவனிக்கும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் மக்கள் பிரச்சினை மீது கவனம் செலுத்துவது இல்லை.
வல்லவன் பொறுப்பு வகிக்கும் துறையில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறை கேட்டில் அதிகாரிகள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய துறையின் செயலாளர் வல்லவன் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அவர் வேலையை விட்டுவிட்டு முதலமைச்சர் அறையில் அமர்ந்து அவரை ஏமாற்றிக்கொண்டு ஜால்ரா தட்டுவதையே வேலையாக வைத்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு எந்த பணியும் செய்யக் கூடாது; மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு அமைச்சர் கட்டளை
கூட்டணி கட்சி என்பதால் அரசு செய்யும் தவறுகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு மட்டும் இந்த பிரச்சினை இல்லை. புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இதுவரை ஒருவருக்கு கூட இலவச மன பட்டா வழங்கப்படவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் பொறுப்பு வகிக்கும் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. எனவே அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.