பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஊழியருக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கிய நகைச்சுவை நடிகர் பாலாவுக்கு புதுவையில் பள்ளி மாணவர் ஒருவர் தாமே உருவாக்கிய சிறிய அளவிலான இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
சின்னத் திரை வாயிலாக லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து இருசக்கர வாகனத்தை பாலா பரிசாக வழங்கினார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது. பாலாவின் இந்த மனிதநேயமிக்க செயலை பாராட்டும் வகையில் புதுச்சேரி சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ் என்ற மாணவன் பயனற்ற தேங்காய், குருமி, சோளக்கதிர், பனைப் பொருட்கள் மற்றும் தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயம் மிக்க வகையில் பாலா பரிசளித்த இருசக்கர வாகனத்தை தத்துரூபமாக உருவாக்கி இருந்தார்.
திருவானைக்காவல் கோவிலின் செல்லப்பிள்ளை அகிலாவுக்கு கஜ பூஜையுடன் பிறந்த நாள் கொண்டாடிய பக்தர்கள்
அப்பொழுது அந்த மாணவன் பாலா அன்ணா எனக்கு சென்னை தெரியாது. நீங்கள் எப்போதாவது புதுச்சேரிக்கு வந்தால் உங்களுடைய சேவையை பாராட்டி நான் உருவாக்கிய இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று வில்லியனூர் ஆச்சாரியா கல்லூரி விழாவிற்கு வந்த நடிகர் பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய கலை நயமிக்க இருசக்கர வாகனத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். மேலும் அந்த மாணவனை ஊக்குவிக்கும் வகையில் கட்டி தழுவி அவரை பாராட்டியது கல்லூரி விழாவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விஷம் கொடுத்து இரண்டு குழந்தைகள் கொலை! என்ன காரணம்? இறுதியில் தாய் எடுத்த விபரீத முடிவு!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலா, இது போன்ற பரிசு பொருட்களை பெறுவதற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. இருப்பினும் தம்பி உருவாக்கிய பொம்மை இருசக்கர வாகனத்தை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறேன். இதுவரை பெரிதாக உதவி எதுவும் செய்யவில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என கூறினார்.