புதுவையில் 11 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு; மீண்டும் பள்ளிகளை மூட பெற்றோர் கோரிக்கை

By Velmurugan s  |  First Published Mar 27, 2023, 2:42 PM IST

வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் பள்ளிகள்  திறக்கப்பட்டது.


புதுச்சேரியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதிக அளவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு எளிதில் தொற்று பரவும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சட்டசபை  கூட்டத்தில் கடந்த 15ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த 16-ஆம் தேதி முதல் 11 நாட்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியத்தில் உள்ள  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை; 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

அதன்படி 11 நாட்கள் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் இயங்க தொடங்கின. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் ஆண்டு இறுதி தேர்வை விரைவில் முடித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!