புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் வில்லியனூரில் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி வில்லியனுார் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் வீதியைச் சேர்ந்த ஆசிரியர் ரங்கசாமி மகன் செந்தில்குமரன் (வயது 45). உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் நெருங்கிய உறவினரான இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது மங்கலம் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் வில்லியனுார் – விழுப்புரம் சாலை கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஹரிகரன் பேக்கரியில் நின்று கொண்டு கட்சியின் விவசாய அணி நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று இரு சக்கர வாகனங்களில் முகத்தில் மாஸ்க் அணிந்துவந்த ஏழு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமரன் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசி உள்ளனர்.
சுற்றுலா வேன் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்; ஒருவர் பலி, 14 பேர் காயம்
புகை மண்டலத்தில் மயங்கி விழுந்த செந்தில்குமரன் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டி சிதைத்துவிட்டு இறந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். பாஜக பிரமுகர் செந்தில்குமரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் 500க்கும் மேற்பட்ட கும்பல் கூடியது.
சம்பவ இடத்திற்கு ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி. நாரா சைய்தன்யா, எஸ்.பி.,க்கள் ரவிக்குமார், பக்தவச்சலவம், இன்ஸ்பெக்டர்கள் வேலையன், ஆறுமுகம் உள்ளிட்ட காவல் துறையினர் செந்தில்குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமரனுக்கு புனிதா என்ற மனைவியும் 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
பாலியல் பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர்மன்றம் வைத்த இளைஞர்கள்; சமூக வலைதளத்தில் வைரல்
கொலை சம்பந்தமாக வில்லியனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.