சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தாளாருக்கு போலீஸ் வலைவீச்சு

By Velmurugan sFirst Published Jul 17, 2023, 2:06 PM IST
Highlights

புதுச்சேரியில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாளாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாதத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவர் அப்பகுதியில் ஜெய பாலகோகுலம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரவு 8 மணிவரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் குமரன் பாலியல் ரீதியாக தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார்.  இதனை வெளியே சொன்னால்  செய்முறை தேர்வில் மதிப்பெண் குறைத்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி இரவு சிறப்பு வகுப்பின் போது பள்ளி நிறுவனர் குமரன் அதே மாணவிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

சென்னை - புதுச்சேரி இடையே நீராவி என்ஜின் வடிவ சுற்றுலா ரெயிலின் சோதனை ஓட்டம்

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆய்வாளர் வேலய்யன்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள பள்ளி நிறுவனர் குமரனை  தேடி வருகின்றனர். 

திமுக அரசின் கையாளாகாத செயல்பாடுகளால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

இதனால் பெற்றோர்கள் இந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளுக்கு  பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக கூறி வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிறுவனரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தொண்டமாதத்தம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!