இட்லிக்கு பருப்பு சாம்பாருக்கு பதிலாக அட்டை பூச்சி சாம்பார்; ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Apr 8, 2023, 2:00 PM IST

புதுச்சேரியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனில் வழங்கப்பட்ட சாம்பாரில் அட்டை பூச்சி கிடந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி.


புதுச்சேரி அடுத்த தன்வந்திரி நகர் எனப்படும் கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும்  வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகள், உறவினர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவமனையின் நிர்வாக பிரிவு கட்டிடம் பின்புறம், ஊழியர்களுக்கான கேன்டீன் அமைந்துள்ளது.

இந்த கேண்டினில் குறைந்த விலையில் உணவு தருவதால் பலரும், இங்கு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஜிப்மரில் பணிபுரியும் ஊழியர்கள் காலையில் அந்த கேண்டில் அமர்ந்து இட்லி, பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு ஊழியர் அங்கு சாப்பிடும் போது சாம்பாரில் அட்டை பூச்சி மிதந்ததால், அதிர்ச்சி அடைந்த ஊழியர் கேண்டின் நிர்வாகியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

Latest Videos

இதற்கு கேண்டின் நிர்வாகிகள் பொறுப்பில்லாமல் சரியான பதில் தராததால் சாப்பாட்டை எடுத்து ஓரம் வைத்துவிட்டு சாப்பிடாமல் எழுந்து சென்றனர். மேலும் இதை அங்கிருந்த ஒரு ஊழியர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திருவாரூர் மத்திய பல்கலை. மாணவிகள் மீது மதுபோதையில் இளைஞர்கள் தாக்குதல்

மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜிப்மர் மருத்துவமனை கேண்டீன் உணவை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே உணவு தரமில்லாதது தொடர்பாக இக்கேன்டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கேண்டினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!