புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பரப்புரைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பொது இடங்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
undefined
தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டது. பிரச்சாரம் களைகட்டியிருக்கும் நிலையில் வாக்காளர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற தயாராக உள்ளனர்.
7வது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி... தி.நகர் முதல் தேனாம்பேட்டை வரை ரோடு ஷோ!
இந்நிலையில், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு வசதியாக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் அல்ல; அமலாக்கத்துறையின் ஆதாரத்தை ஏற்றது டெல்லி நீதிமன்றம்!