புதுச்சேரி துணைமின் நிலைய சுவர் இடிந்து விபத்து! தமிழக தொழிலாளர்கள் 3 பேர் பலி! 10 பேர் படுகாயம்!

By vinoth kumar  |  First Published Mar 31, 2024, 12:24 PM IST

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரப்பாலத்திலிருந்து நைனார் மண்டபம் வழியாக வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


புதுச்சேரி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரப்பாலத்திலிருந்து நைனார் மண்டபம் வழியாக வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை வசந்தநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

Tap to resize

Latest Videos

அப்போது அங்குள்ள மின்வாரியத்துக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!