மத்தியில் ஆட்சி அமைப்பவர்களை புதுவையில் வெற்றி பெற வைத்தால் தான் நமக்கு நிதி கிடைக்கும்; புதுவை முதல்வர்

By Velmurugan sFirst Published Mar 29, 2024, 5:14 PM IST
Highlights

மத்தியில் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் இருந்து பாராளுமன்றம் சென்றால் தான் மாநில வளர்ச்சிக்கு அதிகம் நிதி கொண்டுவர முடியும் என முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தின் போது பேசினார்.

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தேங்காய்திட்டு மற்றும் அரியாங்குப்பம் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இந்த அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவ சமுதாய மக்களுக்கு ஆண்டுக்கு 123 கோடி ரூபாய் ஒதுக்கி கொடுத்து வருகிறோம். 

“20 வருசமா ரோடு சரியில்ல” பிரசாரத்தின் போது கேட்ட ஒற்றை கேள்வி; கடுப்பாகி பாதியில் கிளம்பிய தங்க தமிழ்செல்வன்

தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு நிதி ஒதுக்கி எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை படிக்க உதவி வருகிறது. மேலும் 300 இருதய அறுவை சிகிச்சை நமது அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்ற பிறகு 2000 இளைஞர்களுக்கு அரசு நிரந்தர வேலை கொடுத்துள்ளது. தேர்தல் முடிந்த உடன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

சசிகலா காலில் விழுந்தது ஏன்.? ஓபிஎஸ் பெயரில் 5 வேட்பாளர்கள்.? மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்-எடப்பாடி அதிரடி பதில்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க புதிய தொழிற்பேட்டையை சேதராப்பட்டில் 750 ஏக்கரில் நிறுவப்பட உள்ளன. மத்திய அரசு உதவியாக இருந்தால் தான் இவையெல்லாம் சாத்தியம். நாம் மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பதால் தான் அதிக நிதி கிடைக்கிறது. மத்திய அரசில் என்ன ஆட்சி நடக்கிறதோ அந்த கட்சி புதுச்சேரியிலும் இருப்பதால் தேவையான நிதியை கொடுக்கிறது. 

அதுமட்டும் போதாது அதே கட்சியை சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக சென்றால் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நமக்கான திட்டங்களை கொண்டுவர எளிதாக இருக்கும். காங்கிரசில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்றவர்கள் கொஞ்சம் பேர் தான். அவர்கள் அங்கு யாரையும் பார்க்க முடியாது. எதுவும் கேட்கமுடியாது என பேசினார்.

click me!