வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறது. மறுபுறம் வருமானவரித்துறை சார்பில் அரசியல் பிரமுகர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறது. மறுபுறம் வருமானவரித்துறை சார்பில் அரசியல் பிரமுகர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஜூன் 4ம் தேதிக்கு பிறகு டிடிவி.தினகரன் கையில் அதிமுக.. ஒரே போடாக போட்டு இபிஎஸ்ஐ அலறவிடும் அண்ணாமலை!
இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி. வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். தற்போது அவர் காரைக்காலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இளங்கோ நகரில் உள்ள அவரது சகோதரி வீடு மற்றும் கோடிப்பாக்கம் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று மதியம் முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல! நீ வந்து அதிமுகவை ஒழிப்பியா? அண்ணாமலையை லெப்ட் ரைட் வாங்கிய இபிஎஸ்!
பின்னர் இரவு அவர்கள் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் இதே குழுவினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.