வேட்பாளரின் முகமூடியை அணிந்து கணவருக்காக வாக்கு சேகரித்த மனைவி; புதுவையில் விநோத பிரசாரம்

By Velmurugan s  |  First Published Apr 13, 2024, 2:31 PM IST

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கணவனின் முகமூடி அணிந்து உழவர் சந்தை சிறு வியாபாரிகளிடம் ஓட்டு கேட்ட மனைவி.


புதுச்சேரியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக அவரது மனைவி நிவேதிதா தமிழ்வேந்தன் இன்று முதல் தனது கணவனின் முகமூடியை அணிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக புதுச்சேரியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கி உள்ளார். புதுச்சேரி அண்ணா சிலை அருகே உள்ள உழவர் சந்தையில் சிறு வியாபாரம் செய்யும் பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் தனது கணவருக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார். 

தொடர்ந்து அண்ணா சிலை முதல் நேரு வீதி வரை உள்ள கடைவீதிகளுக்கும் நடந்தே சென்று அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி நோட்டீஸ் வழங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் சென்ற பெண்கள், ஆண்கள் என அனைவரும் வேட்பாளர் தமிழ்வேந்தனின் முகமூடி அணிந்து கொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்தனர்.

Latest Videos

தொண்டர்களின் ஓட்டம் என்னை உருக்குகிறது; ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை - பாமகவினருக்கு ராமதாஸ் கடிதம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிவேதிதா தமிழ்வேந்தன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் எனது கணவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் சாமானிய பெண்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி தர நான் உறுதி அளிக்கிறேன். ஒரு சாமானிய பெண்களுக்கான அத்தியாவசிய தேவைகள் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். அதேபோல் சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கிறோம். 

ஓட்டு கேட்க கூட நேரில் வரமாட்டாரா? ஜோதிமணிக்கு எதிராக எம்எல்ஏ.விடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரியில் ஆண்ட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலமுறை ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும், இனி மேலும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்றே கூறி வருவதாகவும், எனவே இந்த ஒரு முறை அதிமுக சார்பில் ஒரு இளைஞராக களம் இறக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு வாக்களித்தால் அதிமுகவும், எங்கள் கணவரும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவோம் என உறுதி அளிப்பதாக கூறினார்.

click me!