புதுவையில் மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதற்கும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒப்பாரி வைத்தும், பாடை கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மின் வாரியத்தை தனியார் மாயமாக்குவதை கண்டித்தும், உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், புதுச்சேரி மனித உரிமைகள் அமைப்பு சார்பில் பாடை ஊர்வலம் நடத்தி காமராஜரிடம் ஒப்பாரி வைத்து முறையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதற்காக அண்ணா சிலை முன்பு ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் பாடை கட்டி அதில் ஒருவரை சடலம் போல் படுக்க வைத்து மாலை, மரியாதையுடன் சங்கு ஊதி, மணி அடித்து, தாரை, தப்பட்டை உடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அண்ணா சாலை வழியே புறப்பட்ட ஊர்வலம் காமராஜர் சிலை முன்பு வந்தடைந்தது.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றம்
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் காமராஜர் சிலை முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என ஒப்பாரி வைத்து அழுது முறையிட்டனர். இது குறித்து போராட்டக்காரர்கள் சார்பில் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறும்போது. காமராஜர் சீடரான முதலமைச்சர் ரங்கசாமியின் மக்கள் விரோத போக்குகள் குறித்து அவரது குருவான காமராஜரிடம் முறையிட்டு கோரிக்கையுடன் ஒப்பாரி வைத்து அழுது முறையிட்டதாக தெரிவித்தார்.
கேட்டது காலிஃப்ளவர் தோசை, கிடைத்தது கரப்பான் பூச்சி தோசை - அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்
இதனை அடுத்து போராட்டக்காரர்கள் 50-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.