சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி பிரேக் போட்ட நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து.!

By vinoth kumar  |  First Published May 2, 2023, 1:01 PM IST

புதுச்சேரி கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேட்டைச் சேர்ந்த ஜூனத் பேகம் மற்றும் மகன் அப்துல் ரசாத் ஆகியோர் ஈசிஆர் சாலையில் சின்னமுதலியார் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 


புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பிய நபரால், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

புதுச்சேரி கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேட்டைச் சேர்ந்த ஜூனத் பேகம் மற்றும் மகன் அப்துல் ரசாத் ஆகியோர் ஈசிஆர் சாலையில் சின்னமுதலியார் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் முன்னால் சென்ற இருச்சகர வாகனம் சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி திடீரென பிரேக் போட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனால், பின்னால் வந்த அப்துல் ரசாத் வேகமாக வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக் போட்ட போது  நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து மகனும், ஜூனத் பேகமும் தவறி சாலையில் கீழே விழுந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் கீழே விழுந்து கிடந்த ஜூனத் பேகம் மற்றும் அவரது மகன் மீது மோதியது. 

இதில், ஹெல்மட் அணிந்திருந்த மகன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தாய் படுகாயமடைந்தார். இதனையடுத்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூனத்பேகம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!