கேரளாவில் பரவும் நிபா வைரசை கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் - ஆளுநர் நம்பிக்கை

By Velmurugan s  |  First Published Sep 13, 2023, 6:19 PM IST

கேரளாவில் பரவி வரும் நிபா வைரசை கண்டு புதுவையில் மக்கள் அச்சப்பட தேவையில்லை, வைரஸ் தடுப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநில ஆளுநர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ‘ஆயுஷ்மான் பவ’ இயக்கத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை காண புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ. ஜெயக்குமார், எம்பி செல்வகணபதி மற்றும் எம்எல்ஏக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் ‘சந்திரயான்’ எனப்படும் ஆரோக்கியத்தை நோக்கி என்ற திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த திட்டத்தை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

Latest Videos

undefined

மக்களே உஷார் வேகமாக பரவும் உயிர் கொல்லி டெங்கு; பொறியல் கல்லூரி மாணவி பலி 

காசநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சத்துணவு வழங்கும் நபர்கள், அதிக ரத்த தானம் செய்தவர்கள் மற்றும் ரத்ததான முகாம்கள் நடத்தியவர்கள், மூளைசாவு அடைந்து உறுப்பு தானம் செய்த குடும்பம், சிறந்த செவிலியர் அதிகாரி, அங்கன்வாடி ஊழியர்கள், ஆரோக்கியமான குழந்தைகளின் தாயார், சாலை விபத்துக்களில் அடிபட்டவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நபர் உள்ளிட்டோருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கேரளம் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் சுகாாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வர். குறிப்பாக புதுச்சேரி பிராந்தியமான மாஹேவில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற குறிப்பை நாம் சொல்ல இருக்கின்றோம். யாரும் பயப்படத்தேவையில்லை. 

இங்கு யாருக்கும் நிபா வைரஸ் குறித்த அறிகுறிகள் இல்லை. அதே நேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய குடிமகன்; மது அருந்த பணம் தர மறுத்ததால் ஆத்திரம்

மேலும் அங்கிருந்து வரும் ரயிலை நிறுத்துவது, ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இல்லை. அங்குள்ள சுகாதாரத்துறையும் அதுபோன்று சொல்லவில்லை. அதனால் அந்தளவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன என்பதை கண்டறிந்துள்ளனர். பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒருவேளை பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சியமாக புதுச்சேரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளத்தில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம் என்றார்.

click me!