கஞ்சா விற்பனையில் ஆந்திரா, கேரளா, தமிழகம், புதுச்சேரி, ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தொடர்பு இருப்பதால் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநிலம் முழுவதும் இளைஞர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் விதத்தில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கின்றது. அவ்வப்போது காவல்துறை சார்பில் ஆபிரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் புதுச்சேரி மாநிலம் கடந்த சில வருடங்களாக கஞ்சா விற்பனை கேந்திரமாக திகழ்ந்து வருகிறது.
இந்த கஞ்சா கடத்தலுக்கு புதுச்சேரி, விழுப்புரம் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளது. கஞ்சா விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் தமிழகம், விழுப்புரம், புதுச்சேரியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆதரவற்ற பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்ட நினைத்த இளைஞன்; போராடி சாதித்த இளம்பெண்
மேலும் புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு ஒரு டன் அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், கஞ்சா விற்பனையில் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தொடர்பு இருப்பதால் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D