புதுச்சேரி மாநில பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட செல்வ கணபதிக்கு பணமாலை அணிவித்து தொண்டர்கள் உற்சா வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி மாநில பாஜகவின் புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி கடந்த 25ம் தேதி கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டு நேற்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து மேளதாளம் முழங்க இரு சக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்ட பாஜக தொண்டர்கள் முத்தியால்பேட்டை காந்தி வீதி, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக பாஜக தலைமை அலுவலகம் வந்தடைந்தனர்.
அங்கு அவருக்கு தொண்டர்கள் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவருக்கு பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் கட்சி கொடியை கொடுத்து செல்வகணபதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக, பாஜக பிரிஞ்சிட்டாங்க; இனி புதுச்சேரில நாம தான் - தொண்டர்கள் மத்தியில் நாராயணசாமி பேச்சு
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்பொழுது பாஜக தலைவர் செல்வ கணபதியின் தீவிர ஆதரவாளான பிரகாஷ் என்பவர் ஒரு லட்ச ரூபாய் அதாவது 500, 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகளாலான மாலையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பாஜக நிர்வாகிகள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் பந்த்.! தமிழக எல்லையில் பதற்றம்- நிலைமையை கண்காணிக்க மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி உத்தரவ