புதுவையில் வேலை கேட்டு வீதியில் இறங்கிய நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்

By Velmurugan s  |  First Published Jun 22, 2023, 8:50 PM IST

புதுவையில் அரசு பணிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் அமைதி பேரனியாக சென்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முயன்ற நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 


புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளாக போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் யூ டி சி இல் காலியாக உள்ள 116 பணியிடங்களை மட்டுமே நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணியிடங்களுக்கு 50 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு யூ டி சி மற்றும் எல் டி சி யில் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

Latest Videos

undefined

மேலும் பணி நியமன விதிகளின்படி உதவியாளர் பதவிக்காக 20 சதவீதம் நேரடி பயன் பணி நியமன அறிவிப்பை அறிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு மாபெரும் அமைதி பேரணி நடத்தினர். 

விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும் - வானதி சீனிவாசன்

இந்த மாபெரும் அமைதி பேரணியானது சுதேசி மில் சாலையில் தொடங்கி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று புனித இருதய ஆண்டவர் ஆலயம் வழியாக சட்டமன்றத்தை நோக்கி சென்றது. அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

click me!