நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பிறந்த நாள் வாழ்த்து கூறி பேனர் வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு வகைகளில் புதிது புதிதாக பேனர்கள் வைத்து அனைவரையும் ஆச்சரிப்படுத்தி வருகின்றனர். மேலும் பிறந்த நாளான நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே மறைமலை அடிகள் சாலையில் தமிழக முதலமைச்சர் என்ற பெயரில் வைக்கப்பட்ட பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரல் ஆனது. தற்போது அதேபோன்று 2026ல் சேனாதிபதி சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான் என்றும், வா தலைவா உனக்காக காத்திருக்கு ஜார்ஜ் கோட்டை என்ற வசனங்கள் எழுதப்பட்ட பேனர் பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்
அதே வேளையில் புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றம் காலாப்பட்டு தொகுதி சார்பில் நடுக்கடலில் விஜய்க்கு பேனர் வைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் காந்தி சிலை பின்பு வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் பேனர் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த பேனரை வீடியோ எடுப்பவர்கள் இணையத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்; போஸ்டர் ஒட்டி திமுக நிர்வாகி மிரட்டல்