எம்எல்ஏ.வை பார்க்க சைக்கிளில் வந்தவர் சுருண்டு விழுந்து பலி; ஆம்புலன்ஸ் வராததால் நிகழ்ந்த சோகம்

By Velmurugan s  |  First Published Jun 20, 2023, 3:36 PM IST

புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க சைக்கிளில் வந்தவர் திடீரென சாலையில் மயங்கி சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு என்ற குப்புசாமி. இவரது வீடு மற்றும் அலுவலகம் திருவள்ளூர் சாலை அருகே உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேருவை சந்திக்க இன்று சைக்கிளில் வந்துள்ளார். நேருவை சந்தித்த பின்னர் சைக்கிளில் வீடு திரும்பினார். சென்று கொண்டு இருக்கும்போதே எம்.எல்.ஏ வீட்டின் அருகே திடீரென்று மயக்கம் போட்டு சாலையில் விழுந்தார்.

Latest Videos

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரு ஆகியோர் ஓடி வந்து முதியவரை தூக்கி அமர வைத்தனர். பின்னர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். ஆனால் போன் செய்து ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

நடிகர் விஜய்யை முதல்வராக கோட்டையில் அமரவைத்து அழகு பார்க்கும் ரசிகர்கள் - போஸ்டர் வைரல்

இதற்கிடையே, மயங்கி விழுந்த முதியவர் பேச்சு மூச்சு இல்லாமல் காணப்பட்டார். இருந்தாலும், ஆம்புலன்ஸ் வராததால், ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மயங்கி விழுந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக  தெரிவித்தனர்.

புதுவையில் பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து - 7 மாணவிகள் படுகாயம்

முதியவரைக் காப்பாற்ற தகவல் கொடுத்தும் ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் சாலையிலேயே முதியவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!