புதுச்சேரியில் பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கும் வரும் தனியார் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். அந்த வகையில் மூலகுளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்தனர். அப்போது புஸ்ஸி வீதியில் ஆட்டோ வந்தபோது, எதிர்பாராதவிதமாக புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற தனியார் பேருந்துடன் ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
undefined
இதில் ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ்(22) மற்றும் 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான ஓட்டுநர் மற்றும் 8 சிறுமியரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர்.
மருத்துவமனையில் சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தகவல் அறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி விரைந்து வந்து குழந்தைகளை பார்த்தனர்.
Crime: தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகன் ஓட ஓட வெட்டி கொலை; கள்ளக்காதலன் வெறிச்செயல்
இதில் மூலக்குளத்தைச் சேர்ந்த நிக்கிஷா (10), அவந்திகா (10) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் இரு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய துணைநிலை ஆளுநர் தேவைப்படும் குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிக்க சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ள குழந்தைகளை சென்னைக்கு கொண்டு செல்ல குழந்தைகளின் பெற்றோர் கேட்ட போது, தற்போது உயரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சிகிச்சை தேவை என்பதால் 3 மணிநேரம் பயணித்து சென்னை செல்வது ஆபத்து என தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். இரு குழந்தைகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் பரிசோதனை நடக்கிறது. தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை அளிக்க நிபுணர்களும், கூடமும் தயார் நிலையில் இருக்கிறது என்றார்.