நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த மாமியார்: கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மருமகள் கைது

By Velmurugan s  |  First Published Jun 16, 2023, 6:45 AM IST

புதுவையில் நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகள் உள்பட கூலிப்படையைச் சேர்ந்த 4 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


புதுச்சேரி உருளையன்பேட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்னுசாமி. இவரது மனைவி மேரி டெய்சி, 72 வயதான இவரது கணவர் மற்றும் முதல் மகன் இறந்து விட்டனர். இளைய மகன் குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார். இவரது வீட்டின் தரைத்தளம், முதல் தளத்தை வாடகைக்கு விட்டு, 2வது தாளத்தில் தனியாக வசித்து வந்தார். 

கடந்த 13ம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், மேரி டெய்சியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மூதாட்டிக்கு பணம் கொடுக்கல், வாங்கலில் பலரும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியின் 2-வது மனைவி ஊட்டி குன்னூரைச் சேர்ந்த ரெபெக்கா என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

விசாரணையில் கணவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை எழுதி கொடுத்து விட்டால் நான்காவது திருமணம் செய்ய போவதாக ரெபாக்கா தன் மாமியாரை மிரட்டி வந்துள்ளார். மேரி டெய்சி சொத்துக்களை கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெபெக்கா, கூலி படையினரை ஏவி மேரி டெய்சியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து, குன்னூர் விரைந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், ரெபெக்காவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 16-வயது சிறார் உள்பட  திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜேஷ் 27,  சிம்சன்  20, முத்து 19 உள்ளிட்ட நான்கு கூலிப்படையினரை கைது செய்தனர்.

கமிஷன் வாங்கி கல்லா கட்டும் மேயர்; சர்ச்சை போஸ்டரால் திமுகவில் சலசலப்பு

மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர். ரெபேக்கா விடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது முதல் கணவர் பெங்களூருவைச் சேர்ந்தவர் மென்பொறியாளரான அவரை விவாகரத்து செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து வேலூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து புதுச்சேரியைச் சேர்ந்த மேரிடெய்சியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியை 3-வதாக திருமணம் செய்து கொண்டேன். எனது மாமியார் மேரிடெய்சி வீடு வாங்கி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். இந்நிலையில் என் 3-வது கணவர் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை எனக்கு தரும்படி பலமுறை கேட்டேன். ஆனால் மேரிடெய்சி தரவில்லை. இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலியைச் சேர்ந்த தனது வீட்டில் 15 வருடங்களாக நாய்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் உதவியுடன் கூலி படையினரிடம் உதவி கேட்டேன். அவர்களுக்கு 15 லட்சம் பணம் கொடுத்து மாமியாரை கொலை செய்யும்படி கூறியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

உச்சநீதிமன்றத்தையே எதிர்க்கும் அளவுக்கு செந்தில் பாலாஜி மீது பாசமா? நாராயணன் திருப்பதி பாய்ச்சல்

மேலும் எனது மாமியாருக்கு தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் எதிரிகள் இருப்பதால் என் மீது சந்தேகம் வராது என நினைத்தேன். ஆனால் காவல் துறையினர் என்னை பிடித்துவிட்டனர் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

click me!