நடிகர் விஜய்யை முதல்வராக கோட்டையில் அமரவைத்து அழகு பார்க்கும் ரசிகர்கள் - போஸ்டர் வைரல்

By Velmurugan s  |  First Published Jun 20, 2023, 3:11 PM IST

ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சர் என்றும், ஆளப் பிறந்தவர் தளபதி விஜய் என்றும் புதுச்சேரியில் விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


விஜய் மக்கள் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் பள்ளி படிப்புகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்.

Latest Videos

நடிகர் விஜயின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் அதை விமர்சனமும் செய்து வருகின்றனர். மேலும் விஜயின் இந்த செயல் பல்வேறு தரப்புகளால் பாராட்டப்பட்டு இன்று மாநிலம் முழுவதும் இதைப் பற்றிய பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தினர் புதிய பேருந்து நிலையம் மறைமலை அடிகள் சாலையில் ஒரு பேனர் வைத்துள்ளனர்.

நேற்று அண்ணாமலை கைகளால் விருது; இன்று அரசால் விலங்கு - உமா கார்க்கிக்காக குரல் கொடுக்கும் பாஜக

அந்த பேனரில் தமிழ்நாடு சட்டமன்றம் பின்னால் இருப்பது போன்றும் அதற்கு முன்னே டேபிள் முன் நின்று கொண்டு  நடிகர் விஜய் பேசுவது போன்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேசும் டேபிள் முன் பக்கம் ச.ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சர் என்று எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 -ல் தமிழக சட்டமன்றத்தில் உங்கள் குரல் மக்களின் உரிமை குரல் என்றும், ஆளப்பிறந்தவர் தளபதி என்ற வாசகங்கள் பேனரில் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் - திமுக கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயார் - எம்.பி. விஜய் வசந்த் பேட்டி
 

click me!