புதுச்சேரியில் தாவரவியல் பூங்காவில் பாரத மாதா சிலை நிறுவபட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஆளுநர் தமிழிசை இதனை திறந்து வைத்தார்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட பாரத மாதா சிலையை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். முதல் அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார, அனிபால் கென்னடி எம்எல்ஏ, தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, வேளாண் செயலர் குமார், இயக்குநர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பாரதமாதா சிலை தோட்டக்கலை பூங்காவில் இருந்தது. கடந்த 2011ல் தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது. தற்போது மீண்டும் டெரகோட்டாவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, திமுகவில் சனாதன இயக்கம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய ஆளுநர் தமிழிசை சனாதனம் என்பது பற்றி அரசியல் செய்து வருகிறார்கள் என்றார்.
காங்கிரஸ் பிரமுகர் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை; சொத்து தகராறில் தாய், சகோதரர் வெறிச்செயல்
பேட்டியின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் அணிபால் கெண்னடியை அருகில் அமர வைத்துக் கொண்டு திமுக தலைவரும் முதலமைச்சரான ஸ்டாலின் மற்றும் ஆ. ராசா எம்பி ஆகியோரை கடுமையாக சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாரதமாதா சிலைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும், ஆளுநருடன் சேர்ந்து மலர் தூவிய சம்பவமும் அரங்கேறியது.