பீர் 2க்கு 1 இலவசம்! பீரில் கிடந்த அழுக்கு பேப்பர்! அப்படித்தான் இருக்கும் என ஊழியர் எகத்தாளம்!

By Dinesh TG  |  First Published Jun 23, 2023, 2:57 PM IST

புதுவையில், செய்யப்பட்டு வரும் தனியார் மதுபான கடை ஒன்றில், இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இலவசமாக கிடைத்த பீர் பாட்டில் உள்ளே கிடந்த காலண்டர் பேப்பர்களால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 


புதுச்சேரி எல்லை பகுதியான கிருமாம்பாக்கம் அடுத்த கடலூர் புதுச்சேரி ரோட்டில் முள்ளோடை நுழைவு வாயில் பகுதியில் ஸ்ருதி என்ற தனியார் பார் மற்றும் ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது.

இந்த ரெஸ்டாரண்டுக்கு கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி இருவர் மது குடிக்க சென்றனர். அப்போது அங்குள்ள பலகையில் இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆசைப்பட்டு அந்த கூலி தொழிலாளி மூன்று பீரை வாங்கி நண்பர்களுடன் குடித்ததாக கூறப்படுகிறது. 3வது பீர் பாட்டலை பார்த்த போது பீர் பாட்டிலுக்குள் தினசரி காலண்டர் காகிதங்கள் உள்ளே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த பீர் தரமானதா அல்லது போலீ சரக்கா என்ற அச்சத்தில் கடையில் பாரில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளனர். கேசியர் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்று போடப்பட்டுள்ளது அது இதுதான் என்று கூறியுள்ளார்

அதற்கு அந்த கூலித் தொழிலாளி இதை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டு இருக்கின்றார் தர முடியாது என்று மறுத்ததும் பிறகு எனக்கு இந்த பீர்கான பில்லை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.



அதற்கு கேசியர் மூன்று பீருக்கும் பில் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு பிறகு இந்த பீரில் காகிதம் இருப்பது குறித்து கேட்டதற்கு பணியில் இருந்த ஊழியர்கள் முன்னுக்கு முரணான தகவலை தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதிர்ச்சிடைய்த மதுப்பிரியர், இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் இது சம்பந்தமான தகவலை தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். மேலும் அந்த கடைக்கு வந்தவர்கள் பலரும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Tap to resize

Latest Videos

click me!