வெயிலால் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை.! ஈடு செய்ய பள்ளிகள் செயல்படும் 9 சனிக்கிழமைகளின் பட்டியல் வெளியீடு

By Ajmal Khan  |  First Published Jun 23, 2023, 3:44 PM IST

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன்  காரணமாக பள்ளிகளுக்கு 15 நாட்கள் கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அதனை ஈடு செய்ய 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவித்துள்ள புதுச்சேரி அரசு 9 சனிக்கிழமைகளுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.


வெயிலால் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆண்டு தோறும் பள்ளி  இறுதி தேர்வு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பள்ளி விடுமுறை தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்தநிலையில் இந்ததாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் பள்ளிகள் திறப்பு தேதி 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்ததால் பள்ளி மாணவர்கள் நலனை கருதி மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தமிழகம் மற்றும் புதுவையில் தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்

இந்தநிலையில் பள்ளிகளுக்கு கூடுதலாக விடப்பட்ட விடுமறை நாட்களை  ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி பள்ளிக்கல்விதுறை சார்பாக எந்த எந்த சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவித்துள்ளது. ஜூன் 24 ஆம் தேதி, ஜூலை 8 ஆம் தேதி, ஜூலை 22ஆம் தேதி, ஆகஸ்ட் 12 மற்றும் 26 ஆம் தேதி, செப்டம்பர் 9 மற்றும் 23 ஆம் தேதி, அக்டோபர் 14 மற்றும் 28 ஆம் தேதி அகிய நாட்களில் பள்ளிகள் செயல்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.   

click me!