புதுவையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் மணமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

By Velmurugan s  |  First Published Jul 17, 2023, 5:25 PM IST

புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டதால் மனமுடைந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரி மாநிலம் கண்டமங்கலம் அருகே உள்ள பங்கூர் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன், விமலா தம்பதி. இவர்களது மகன் பாஸ்கரன். (வயது 28). புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

கருத்து வேறுபாடு காரணமாக  திடீரென  திருமண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்த பாஸ்கரன் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஸ்கரன் நேற்று இரவு 8 மணிக்கு சின்ன பாபு சமுத்திரம் அருகே உள்ள கெண்டியாங்குப்பம் ரயில்வே கேட் அருகே  புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்துள்ளார். 

Latest Videos

விபசார வழக்கை சாதகமாக முடித்துத் தர ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பெண் எஸ்.ஐ. கைது 

இதனால் பாஸ்கரன் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அதே ரயில் நிறுத்தப்பட்டு அவரை மீட்டு ரயில் மூலமாக கண்டமங்கலம் சின்ன பாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் அவரை ஒப்படைத்துவிட்டு சென்று விட்டனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ஜீப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் என்ற சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!