இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இதன் மூலம் தமிழக மக்கள் அதிகம் பலன் பெறுவார்கள் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது.
இதற்கான இடத்தை தேர்வு செய்யவே சில மாதங்கள் வரை ஆனது. பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் உட்பட்ட தோப்பூரில் அமையும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பு, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!
அதன் பின்னர் மிக விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை. சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சுற்றுச்சுவரைத் தவிர வேறு எந்தவொரு கட்டுமான பணிகளும் நடக்கவில்லை. கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுகவின் உதயநிதி ஒற்றை செங்கல்லை வைத்து எய்ம்ஸ் கட்டுமான பணிகளைச் சாடி இருந்தார்.
இது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் இப்போது மீண்டும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்த விவாதம் எழுந்து உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கா கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் எங்கு அமைக்கலாம் என்று சிக்கல் எழுந்த நிலையில், மதுரையில் கட்ட முடிவு செய்தோம்.
மேலும் செய்திகளுக்கு..கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்
அதற்கான தொகை ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று பேசியிருந்தார். எய்ம்ஸ் குறித்த நட்டாவின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவியது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் சுற்றுச் சுவரைத் தவிர எதுவும் கட்டவில்லை என்று இணையத்தில் பலரும் சாடி வந்தனர்.
மதுரை எம்பி வெங்டேசன், ‘புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையைக் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கடிதத்தைத் தேடி நானும் மாணிக்கம் தாகூர் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்’ என்று நக்கலாக பதிவிட்டு இருந்தார். மத்திய அரசான பாஜகவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ??’ என்ற புதிய டி-சர்ட் சந்தைக்கு வந்துள்ளது. இது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !