கணவனை கழட்டிவிட்டு, ஒரே நேரத்தில் 2 கள்ளக் காதலன்.. ஷிப்ட் போட்டு மாறி மாறி உல்லாசதில் சௌந்தர்யா.. கொடூர கொலை.

Published : Sep 24, 2022, 03:12 PM IST
கணவனை கழட்டிவிட்டு, ஒரே நேரத்தில் 2 கள்ளக் காதலன்.. ஷிப்ட் போட்டு மாறி மாறி உல்லாசதில் சௌந்தர்யா.. கொடூர கொலை.

சுருக்கம்

கணவனைப் பிரிந்த பெண்ணுக்காக ஏற்பட்ட போட்டியில் முதல் கள்ளக்காதலனை இரண்டாவது கள்ளகாதலன் குத்தி கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.சென்னை சாலிகிராமத்தில் இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-  

கணவனைப் பிரிந்த பெண்ணுக்காக ஏற்பட்ட போட்டியில் முதல் கள்ளக்காதலனை இரண்டாவது கள்ளகாதலன் குத்தி கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்யா (37) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மேட்டுக்குப்பம்  பகுதியைச் சேர்ந்த  மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும்  விஜி (27)  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

அதேநேரத்தில் சௌந்தர்யாவுடன் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (40)  என்பவருடன் பழக்கம் இருந்து வந்தது. விஜி இல்லாத நேரங்களில் பிரபுவுடன் சௌந்தர்யா உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த 20 நாட்களாக விஜி சௌந்தர்யாவின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் பிரபுவும் சௌந்தர்யாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார், இது விஜய்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது, பிரபு உடனான கள்ளக்காதலை துண்டிக்க வேண்டும் என சௌந்தர்யாவை விஜி வற்புறுத்தி வந்தார்.

இதையும் படியுங்கள்: உல்லாசத்துக்கு மறுப்பு? ரிசாட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை.. முக்கிய பாஜக தலைவரின் மகன் சிக்கினார்..!

இது குறித்து விஜி பலமுறை சௌந்தர்யாவை எச்சரித்தார். அதேநேரத்தில் சௌந்தர்யாவின் செல்போனை வாங்கி சௌந்தர்யா உடனான உறவை துண்டிக்கா விட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து பிரபுவுக்கு ஆடியோ ஒன்றையும் அனுப்பினார் விஜி, இந்நிலையில்தான் விஜியை  தீர்த்துக் கட்ட முடிவு செய்தார், அதற்காக நேரம் காப்பாத்து காத்திருந்தார். அதே நேரத்தில் கள்ளக்காதலி சௌந்தர்யாவும் பிரபுவுடன் கைகோர்த்தார், இந்நிலையில்தான் நேற்று மாலை சௌந்தர்யாவை சந்திக்க பிரபு வந்தார், அப்போது விஜய் அங்கு மதுபோதையில் கிடந்தார். 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதில் சௌந்தர்யா,பிரபு சேர்ந்து விஜியை ஆத்திரம் தீர கத்தியால் குத்தி  குத்தி கொலை செய்தார். பின்னர் சௌந்தர்யாவும் பிரபுவும் சேர்ந்து அதை மறைக்க முயற்சித்தனர், பிறகு வழக்கம்போல சௌந்தர்யா பணிக்கு சென்றுவிட்டார், இந்நிலையில்தான் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சௌந்தர்யாவின் பிள்ளைகளிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படியுங்கள்: உங்க அம்மா என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா! நீ வா! கள்ளக்காதலியின் மகன், மகளையும் சீரழித்த கொடூரன்

அதில் கிடைத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த பிரபுவை தூக்கி வந்து விசாரணை நடத்தினர், அதில் சௌந்தர்யாவுக்காக ஏற்பட்ட போட்டியில் விஜியை கொலை செய்ததாக கூறினார். இதனையடுத்து சௌந்தர்யா மற்றும் பிரபு மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!
12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!