RSS பேரணி நீதிமன்ற அனுமதியோடுதான் நடக்கிறது.. ஆனால் இஸ்லாமியர்களின் தோழன் அதிமுகதான்.. ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2022, 1:47 PM IST
Highlights

ஆர்எஸ்எஸ் பேரணி நீதிமன்ற அனுமதியோடு நடப்பதால் அது குறித்து கருத்து சொல்ல முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி வழங்கப்பட்டிருப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் பேரணி நீதிமன்ற அனுமதியோடு நடப்பதால் அது குறித்து கருத்து சொல்ல முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி வழங்கப்பட்டிருப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா சுதந்திர தினம் 75வது ஆண்டு , அம்பேத்கர் பிறந்த தின  நூற்றாண்டு,  விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத  நிலையில், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை ஒழுங்கு படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஆனால் அதற்கு அனுமதி மறுக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: Venkaiah Naidu: pm modi: பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு

இந்த மனு ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ஊர்வலத்தில் எந்தவிதமான கோஷங்களை எழுப்பக்கூடாது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் எந்த செயலிலும்  ஈடுபடக்கூடாது, அதேபோல் எந்த வழியில் ஊர்வலம் செல்ல போகிறார்கள் என்பதை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது, மேலும் இது போன்ற நிபர்ந்தனைகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு  உறுதி அளிக்காததால் அனுமதி தருவதில் காலதாமதம் ஆகிறது என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுது. 

இதையும் படியுங்கள்:  முதல்வர் நாற்காலியில் ஹாயாக CM மகன்.. வெளியானது அதிர்ச்சி புகைப்படம்... கழுவி ஊற்றும் எதிர்க் கட்சிகள்

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதி அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினரோ, ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது சட்டத்தை மதிக்க கூடிய இயக்கம் என்றும் விளக்கம் அளித்தது. இப்படி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பேரணிக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதக் கலவரத்திற்கு வித்திடும் இதுபோன்ற பேரணிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என பல அரசியல் கட்சித் தலைவர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற அனுமதியோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பதால் இதில் கருத்து சொல்ல முடியாது என கூறியுள்ளார்.  சென்னை போயஸ் கார்டன் தோட்டத்தில் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:- 

நீதிமன்ற அனுமதியோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கிறது என்பதால் நீதிமன்ற முடிவை மதிக்கின்ற சூழல்தான் இருக்கிறது. இதுகுறித்து இதற்குமேல் கருத்து சொல்ல முடியாது என்றார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான சோதனை குறித்து கேள்விக்கே, எப்போதும் இஸ்லாமியர்களுடன் தோளோடு தோள் நிற்கும் நண்பன் அதிமுக மட்டும் தான் என்றார். தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடக்கிறது என்றும், ஏன் திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு அந்தளவுக்கு சீர்கெட்டு விட்டது என்றார். 
 

click me!