முதல்வர் நாற்காலியில் ஹாயாக CM மகன்.. வெளியானது அதிர்ச்சி புகைப்படம்... கழுவி ஊற்றும் எதிர்க் கட்சிகள்

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2022, 12:49 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் நாற்காலியில் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும் முதலமைச்சல் நாற்காலியின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் நாற்காலியில் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும் முதலமைச்சல் நாற்காலியின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால்

தவறான புகைப்படத்தை பகிர்ந்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக ஷிண்டே வின் மகன் ஸ்ரீகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா விலிருந்து 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் அதிரிப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுக்கு ஆதரவு வழங்கினார். இதனை அடுத்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே பாஜக உடன் இணைந்து மகாராஷ்டிராவின் ஆட்சி அமைத்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே  மகாராஷ்டிர மாநில முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் முதலமைச்சர் ஷிண்டே இல்லாதபோது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன், ஸ்ரீகாந்த் முதலமைச்சர் நாற்காலியில் அமரிந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீகாந்த் ஒரு சூப்பர் முதலமைச்சர் என்றும், என்னதான் இருந்தாலும் முதலமைச்சர் நாற்காலிக்குரிய கண்ணியத்திற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இதையும் படியுங்கள்: kapil sibal: அரசு, போலீஸ், விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: கபில் சிபல் கவலை

ஆனால், தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஸ்ரீகாந்த் ஷிண்டே , எதிர்க்கட்சிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன, தற்போது அந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள இடம் தானேயில் உள்ள எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம், அங்கு நானும் எனது தந்தையும் பல ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளை கேட்டு வருகிறோம்,  அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்க இடம் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமோ, அல்லது அவரது அரசு அலுவலகமோ இல்லை,

நான் இரண்டு முறை எம்பி ஆக இருந்திருக்கிறேன். புரோட்டாகால், நெறிமுறைகள் அனைத்தையும் நன்கு அறிவேன். இன்று முதல்வர் ஒரு வீடியோ கான்பிரன்ஸ் நடத்தினார், அங்கு மேசையில் மகாராஷ்டிர முதலமைச்சர் என பதாகை வைக்கப்பட்டிருக்கிறது, அதை நான் கவனிக்கவில்லை, ஆனால் யாரோ அதை புகைப்படம் எடுத்து ஷேர் செய்து  எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:  மக்கள் ஆதரவுடன் வளரும் இசுலாமிய அமைப்புகளை குறிவைப்பதை சங்பரிவார் கும்பல் கைவிட வேண்டும்.. கொதிக்கும் வைகோ.

முன்னதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களை ஸ்ரீகாந்த் ஷிண்டே வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார், எனது  தந்தை ஷிண்டே ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்கிறார், அவர் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர் அல்ல, எப்போதும் நடமாடுகின்றன முதல்வர், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தபோது, உத்தவ் தாக்கரே வீட்டை விட்டு வெளியில்கூட வரவில்லை என கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில்தான் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் ரவி வார்பே, சூப்பர் முதல்வர் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள், முதல்வர் இல்லாத நிலையில் அவரது மகன் முதல்வர் பதவியில் உள்ளார், இது என்னமாதிரியான ராஜ தர்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கணபதி நாடாளுமன்றத் தொகுதியில் பிஸியாக இருக்கிறார், அதனால் அவரது மகனிடம் முதல்வர் நாற்காலியை ஒப்படைத்திருக்கிறார் என்றும் சிவசேனா எம்எலசி செய்தி தொடர்பாளர் மனிஷா கயண்டே  விமர்சித்துள்ளார்.  
 

click me!