அதிமுக-பாஜக ஆட்சியில் கூட RSS பேரணி நடக்கல.. திமுக ஆட்சியல் நடக்கிறது.! ஸ்டாலின் அரசை குத்தி கிழிக்கும் சீமான்

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2022, 3:46 PM IST
Highlights

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றால், தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றால், தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்த போதுகூட இது போன்ற செயல்கள் நடைபெறவில்லை, ஆனால் இது இந்த ஆட்சியில் நடக்கிறது என்றால் திமுகதான் மதவாத கட்சி என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது, தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.

காவல்துறை மற்றும் தமிழக உள்துறை அமைச்சகம் அதற்கான அனுமதி தருவதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஆர்எஸ்எஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.  உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது, இந்நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவந்தி ஆதித்தனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: narayana murthy:Infosys: காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை

அமைதி ஒற்றுமையுடன் நல்லிணக்கத்தோடு வாழ்கிறது தமிழகம். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் என்ன கோரிக்கை முன் வைத்தார்கள் என தெரியவில்லை, என்.ஐ.ஏவை வைத்து நாட்டில் கொடும் செயல்கள் நடந்து வரும் நிலையில் 52 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்பவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தியபோது கூட இது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை, ஆனால் இன்று நடக்கிறது என்றால் திமுகவினர் தான் மதவாத முற்போக்குவாதிகள்.

இதையைல்லாம் பார்த்து நாமும் சிரித்து விட வேண்டும், மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் என  சட்ட மசோதா இருக்கும்போது இதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்.

இதையும் படியுங்கள்: kapil sibal: அரசு, போலீஸ், விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: கபில் சிபல் கவலை

ஆர்எஸ்எஸ் ஆட்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை அமர்த்துவதற்குதான், அப்படி என்றால் மாநில அரசுக்கு இதில் என்ன உரிமை இருக்கிறது, ஏற்கனவே முதலமைச்சர் கூறியிருக்கிறார், ஆளுநர் ஒரு ஆட்சி, திமுக ஒரு ஆட்சி, ஆக தமிழகத்தில் 2 ஆட்சிகள்  நடத்த பாஜக முயல்கிறது.

ஆனால் இதுபோன்ற நியமனங்கள் ஜெயலலிதா கருணாநிதி ஆட்சியின் போது இருந்ததா? ஆளுநர் வானளாவிய அதிகாரம் இருப்பதைப்போல செயல்படுகிறார், இது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்  செயல், தாழ்த்தப்பட்டவன் என்றாலும் அவனிடம் வரி வாங்குவீர்கள், அவன் உழைப்பில் வாங்கும் வரியில் உயர் சாதியினருக்கும் அனுபவிப்பார்கள், ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்வதற்கோ,சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கோ அனுமதி இல்லை, வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகள். இவ்வாறு சீமான் கூறினார். 
 

click me!