73 வயதான மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி எழுப்பியுள்ளார்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது வயதைக் காரணம் காட்டி அரசியலை விட்டு விலகுவாரா என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய அவர் “பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்போது வயது 73. அவர் 4 முறை குஜராத் முதல்வராக இருந்தவர் மற்றும் 2வது முறையாக பிரதமராக பணியாற்றுகிறார். அரசியலில் இருந்து விலகுவாரா? உண்மையில், அவர் இன்னொரு முறை பிரதமராக நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதேபோல், மக்களின் ஆதரவைப் பெறும் வரை அரசியலில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியின் பல பகுதிகளில் பாஜக வாக்காளர்களை பணத்துடன் கவர்ந்து வருவதாக ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து பேசிய அவர் " தேர்தலில் தோல்வி பயத்தில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தனர். பல இடங்களில் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நான் பாஜகவில் இருந்தபோது இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை. நான் வெற்றி பெற்றேன். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடாமல் தேர்தலை நடத்துங்கள்" என்று கூறினார்.
undefined
இதையும் படிங்க : Breaking : சிபிஎஸ்இ +2 முடிவுகள்.. முதலிடம் பிடித்த திருவனந்தபுரம் மண்டலம்.. சென்னைக்கு எந்த இடம்?
தொடர்ந்து பேசிய அவர் "எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் எனது வெற்றியை கணித்துள்ளன. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். 2023 தேர்தல் முடிவுகள் 2024 லோக்சபா தேர்தல் மற்றும் பிற மாநில தேர்தல்களில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று கூறினார்.
ஜெகதீஷ் ஷெட்டர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் குற்றச்சாட்டுகளுக்கு ஷெட்டர் பதிலளித்தார். அப்போது “ தற்போது நான்காவது முறையாக எம்.பி.யாக இருந்து, மத்திய அமைச்சராக பதவி வகித்து வரும் ஜோஷி, அரசியலில் இருந்தும் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா என்று கேள்வி எழுப்பினார்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டபேரவைக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான நாளை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காங்கிரஸ் - ஆளும் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் களத்தில் இருந்ததால் அங்கு மும்முனை போட்டி நிலவியது. ஆனதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு பாராளுமன்றம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.. ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. உளவுத்துறை எச்சரிக்கை..