ஆளுநர் தமிழிசையின் செயல்பாடு அனைத்தும் விளம்பரத்திற்கானதே - முன்னாள் முதல்வர் விமர்சனம்

Published : May 12, 2023, 12:03 PM IST
ஆளுநர் தமிழிசையின் செயல்பாடு அனைத்தும் விளம்பரத்திற்கானதே - முன்னாள் முதல்வர் விமர்சனம்

சுருக்கம்

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது என்றும், அவரது செயல்பாடு புதுச்சேரி வளர்ச்சிக்காக இல்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தாததால், அம்மாநில மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். இதனால் கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய அரசு ஆளுநர்களை வைத்து எதிர்கட்சி, ஆளும் மாநில முதல்வர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. ஜிப்மர் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அந்தர் பல்டி அடித்துள்ளார். துணைநிலை ஆளுநர் உண்மைக்கு புறம்பாக பேசக்கூடாது. அவர் பேசுவது அவருடைய பதவிக்கு அழகல்ல. இவர் புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவுக்குதான் ஆளுநர். ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் இவர் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்று தெரியவில்லை. 

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபர் 7 பேருக்கு மறு வாழ்வளித்த நெகிழ்ச்சி

தமிழிசை சௌந்தரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதன் பின்னர் அரசியல் பேசட்டும். மேலும் தமிழிசை  சௌந்தரராஜன் முதலமைச்சரின் அதிகாரத்தை கையில் எடுத்துகொண்டு முதல்வர் ரங்கசாமியை செயல்படவிடாமல் தடுக்கிறார். இவர்தான் புதுச்சேரி மாநிலத்தின் சூப்பர் முதல்வர். தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது. அவரது செயல்பாடு புதுச்சேரி வளர்ச்சிக்காக இல்லை. துணைநிலை ஆளுநர் பொறுப்போடு செயல்பட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

தனியார் தீம் பார்க் தண்ணீரில் விளையாடிய 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

மேலும் எனக்கு நிர்வாக திறமையில்லை என தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி என்னை குறைகூறுகிறார். அவருக்கு நிர்வாகமே தெரியாது. என்னை குறை கூறுவதை ரங்கசாமி இத்துடன் நிறுத்திகொள்ள வேண்டும். எங்களை குறை சொல்வதை விட்டுவிட்டு நிரவாகத்தை சரியாக நடத்த வேண்டும். மத்திய அரசை அணுகி தேவையான நிதியை பெற வேண்டும் என தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
12 நிமிடத்தில் உரையை முடித்த விஜய்.. அப்செட்டான தொண்டர்கள்..!