அதிமுக ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிட்டேன்.. ஜெயலலிதா வெளிநாட்டு சிகிச்சைக்கு போகாதது ஏன்? சசிகலா பரபர.!

By vinoth kumarFirst Published Dec 23, 2022, 1:56 PM IST
Highlights

அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவோம். நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன்.  ஒருசாராருக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதில்லை. தொண்டர்கள் சேர்ந்து முடிவெடுப்பதுதான் என்றும் நிரந்தரமானது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்றும், செயல்படுத்துவது வேறொன்றாகவும் உள்ளதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என சசிகலா விமர்சித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா;- அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவோம். நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன்.  ஒருசாராருக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதில்லை. தொண்டர்கள் சேர்ந்து முடிவெடுப்பதுதான் என்றும் நிரந்தரமானது. தொண்டர்களை சோர்வடையவிட மாட்டேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டேன் என சசிகலா கூறினார். 

இதையும் படிங்க;- திமுகவுக்கு ஒன்னு மட்டும் சொல்றேன்! அம்மா சொல்லை வேண்டுமானால் நீங்க நீக்கிவிடலாம்.. ஆனால்.. சசிகலா ஆவேசம்.!

புயல் வெள்ளத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். ஜெயலலிதா கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கரும்பு என வழங்கினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்றும், செயல்படுத்துவது வேறொன்றாகவும் உள்ளதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்தால் அதற்கான முடிவை மக்களே பார்த்துக் கொள்வர். 

ஆறுமுகசாமி ஆணையம் குறித்து சசிகலா கூறுகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்து பார்த்துச் சென்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, எய்ம்ஸ் மருத்துவர்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே? என கேள்வி எழுப்பினார். எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் தினமும் வந்து ஜெயலலிதாவை பரிசோதனை செய்து அறிக்கை கொடுத்தார்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வெளிநாடு அழைத்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், வெளிநாடு சிகிச்சை பரிந்துரைத்தபோது ஜெயலலிதாவே அதை வேண்டாம் என கூறினார். மருத்துவர்களை இங்கே வரவழைத்து சிகிச்சை பெறவே அவர் விரும்பினார் என்று சசிகலா பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க;-  அம்மாவோட பயணித்தவங்க நீங்க! நான் சொல்ல வேண்டாம்! அரசியலில் இறங்கி விளையாடுங்க.. சசியை அழைக்கும் ஜெ. நிழல்.!

click me!