நானும் கிறிஸ்தவன் தான்..! இத சொன்னா அவங்களுக்கு நல்லா எரியும்- பாஜகவினரை வெறுப்பேற்றும் உதயநிதி

Published : Dec 23, 2022, 01:25 PM IST
நானும் கிறிஸ்தவன் தான்..! இத சொன்னா அவங்களுக்கு நல்லா எரியும்- பாஜகவினரை வெறுப்பேற்றும் உதயநிதி

சுருக்கம்

கிறிஸ்தவ பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்திருப்பதாகவும் எனவே நானும் கிறிஸ்துவன் தான், என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திமுக சார்பாக சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, 2 ஆயிரம் குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இதன் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,  தேர்தலுக்காக மட்டும் இந்த நலத்திட்ட உதவிகள் அல்ல, தொடர்ந்து வருடம் முழுவதும் மக்கள் பணியே முதல் பணி என பணியாற்றி வருகிறேன்.

சிறந்த மாநிலமாக தமிழகம்

கடந்த வருட மழையில் சாலைகளில் மழை நீர் நின்றது. அதற்கு காரணம் கடந்த ஆட்சியின் விளைவு. ஆனால் இந்த ஆட்சியில் மாண்டாஸ் புயலின் போது எங்கும் மழை நீர் நிற்கவில்லை. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதற்கு முதல்-அமைச்சரின் அயராத உழைப்பு மட்டும் திட்டங்கள் தான் காரணம்

கால் இருக்காதுன்னு அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா! வீட்டை அடித்து நொறுக்கிய 3 திமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு

இது தான் திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். சிலருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இப்போது அங்கு அல்லேலூயா எனக் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும். அவர் எப்போதுமே மாலையும் கத்தமாகத் தான் இருப்பார். அதேநேரம் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார்.

நானும் கிறிஸ்துவன் தான்

இதற்குப் பெயர் தான் சமூக நிதி ஆட்சி. அந்த ஆட்சியைதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். சேகர்பாபு அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும். நானும் கிறிஸ்துவன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது ஒரு கிறிஸ்துவ பள்ளியில். சமூக நல்லிணக்கத்தோடு அமைச்சர் சேகர் பாபு எவ்வாறு செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி என கூறினார். 

இதையும் படியுங்கள்

மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் கவனம் செலுத்திய ஸ்டாலின்..! மக்களை மறந்துவிட்டார்- அண்ணாமலை ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகமா..? போதை மாஃபியாக்களின் வேட்டைக்காடா..? திமுக அரசின் முகத்திரையைக் கிழிக்க அதிமுக அறைகூவல்..!
TVK Vijay Game: முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா?!