கொடநாடு கொலை குற்றவாளியை எப்போ தூக்கப் போறீங்க.? ஸ்டாலினை விடாமல் கேள்வி கேட்கும் ஓபிஎஸ் தரப்பு.!

By Asianet TamilFirst Published Jul 8, 2022, 10:22 PM IST
Highlights

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கிளைமாக்ஸை நெருங்கி வருகிறது. ஜூலை 11 அன்று ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி, எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்க இபிஎஸ் தரப்பு எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டது. இதைத் தடுப்பதற்காக இறுதிக் கட்ட முயற்சியாக நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. இதற்கிடையே ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் அதிமுக இரண்டாம் கட்டத்தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் , அதிமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர் செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

இதையும் படிங்க: அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்

அப்போது அவர் கூறுகையில், “கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் அவரது மறைவுக்கு பிறகு  ஐந்து கொலை நடந்திருக்கிறது. அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் திருடப்பட்டுள்ளன. கட்சியின் கட்டுப்பாடு விதிகளை மதித்துதான் சட்டமன்றத்தில் கொடநாடு வழக்கு குறித்து பேசியதைக் கண்டித்துக அனைவரும் வெளிநாடுப்பு செய்தோம். அந்தக் கொலை சம்பவம் நடைபெற்ற பிறகு கொடநாடு வீட்டில் காவல்துறையின் பாதுகாப்பு இல்லை. அது ஒரு தனியார் சொகுசு வீடு. அதனால், அங்கு காவல்துறை பாதுகாப்பு தர முடியாது. சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு கொலை வழக்கு சம்பவத்தை உடனடியாக விசாரிப்பேன் என்றார். ஆனால், அந்த வழக்கை இன்னும் எடுக்கவில்லை. 

இதையும் படிங்க: தமிழகத்தில் 8 எம்.பி. தொகுதிகள் உள்பட 144 தொகுதிகள்.. பாஜகவின் மெகா பிளான்.. எல்.முருகனுக்கு புது அசைண்மென்ட்!

எனவே, கொடநாடு கொலை வழக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறையாக விசாரித்து உடனடியாகக் விரைந்து கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  அதிமுகவின் தலைமை பொறுப்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர்தான் இப்போதும் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொது செயலாளர் என்ற பதவி இல்லை” எனக் கூறினார்.
 

இதையும் படிங்க: அதிமுக என்ன சாதி கட்சியா? கட்சி ஆபிசுக்கு கண்டிப்பா வருவேன் - பயமுறுத்தும் சசிகலா

click me!