அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு... தள்ளுபடி செய்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்!!

Published : Jul 08, 2022, 10:02 PM IST
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு... தள்ளுபடி செய்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்!!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, முறையாக தேர்தல் நடைமுறைகளை கையாளாமல் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் 23 ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? தடை கோரி ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!!

அதன் பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் வரும் 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அக்கூட்டத்தை நடத்த ஒபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டுமென புதிதாக கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை 23 ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்பு, விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு.. பதற்றத்தில் பன்னீர்.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யபட்ட பதில் மனுவில், மனுதாரர் கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை இல்லை என தெரிவிக்கபட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது எனக் கூறும் மனுதாரர், பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று முரண்பாடாக தெரிவித்துள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!
Annamalai: தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! அண்ணாமலை கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?