பாதுகாப்பு கொடுங்க... அதிமுக அலுவலகத்திற்கு ஆபத்து... ஜெயக்குமார் பரபரப்பு புகார்!!

Published : Jul 08, 2022, 09:11 PM ISTUpdated : Jul 08, 2022, 09:19 PM IST
பாதுகாப்பு கொடுங்க... அதிமுக அலுவலகத்திற்கு ஆபத்து... ஜெயக்குமார் பரபரப்பு புகார்!!

சுருக்கம்

அதிமுக அலுவலகத்திற்கு ஆபத்து இருப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். 

அதிமுக அலுவலகத்திற்கு ஆபத்து இருப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தடைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இருதரப்பு வாதங்களையும் கேட்டப்பின் வரும் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சமூக விரோதிகளால் ஆபத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் அதிமுக அமைச்சரிடம் இருந்து இத்தனை லட்சம் பறிமுதலா? ஷாக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!!

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமை கழகத்தில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைய இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆகவே அதிமுக தலைமை அலுவலத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். பொதுக்குழு கூட்டம் தொடர்பான தீர்ப்பு திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் 100% நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். பொதுக்குழு கூட்டத்திற்கு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரவேண்டியவர்கள் சென்னைக்கு வர தொடங்கிவிட்டனர். ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தமிழக முதலமைச்சர் சந்தித்து கடிதம் குறித்து பேட்டி அளித்ததன் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுக என்ன சாதி கட்சியா? கட்சி ஆபிசுக்கு கண்டிப்பா வருவேன் - பயமுறுத்தும் சசிகலா

சசிகலாவே ஓபிஎஸுக்கும் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வரை பாராட்டி ஓபிஎஸ் மகன் அறிக்கை வெளியிட்டிருப்பது, திமுகவைச் எதிர்த்த அதிமுகவில் இருந்து கொண்டு இதுபோன்று செயல்படுவது சரியா? ஓபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஐஸ் வைக்கிறார். இதன் மூலம் ஓபிஎஸ் தரப்புக்கு திமுக ஆதரவாக இருக்கிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது ஏவுதலின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. ஆனால் வருமான வரித்துறையினர் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!