ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்று ஒரு மதமே இங்கு இல்லை: டிகேஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2022, 3:16 PM IST
Highlights

ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்று ஒரு மதம் இல்லவே இல்லை என்றும், சைவம் மற்றும் வைணவம் மட்டும் தான் இருந்தது என திமுக  செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். 

ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்று ஒரு மதம் இல்லவே இல்லை என்றும், சைவம் மற்றும் வைணவம் மட்டும் தான் இருந்தது என திமுக  செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ராஜராஜ சோழன் தமிழ் மன்னன், சைவ மன்னன், அதனால்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவார்கள் என டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் திரைக்கு வந்தது முதல், ராஜராஜ சோழன் பற்றிய விவாதம் அதிகரித்துள்ளது. ராஜராஜ சோழனை இந்து மன்னனாக காட்ட முயற்சிகள் நடந்திருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன்,  கலையை சரியாக பயன்படுத்த வேண்டும், ஆனால் அந்த கலையை வைத்து தமிழர்களின் அடையாளங்களை அபகரக்க முயற்சிகள் நடக்கிறது.

இதையும் படியுங்கள்:   தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு; சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்;- தமிழிசை சவுந்திரராஜன்

திருவள்ளுவருக்கு காவி  உடை அணிவித்தது போல, இப்போது ராஜராஜ சோழனை இந்துவாக சித்திரிக்க முயற்சிகள் நடக்கிறது. இது போன்ற செயல்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது, ராஜராஜ சோழன் இந்துவே அல்ல என அவர் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சை பாஜகவினர் கண்டித்து வருகின்றனர்.  ராஜராஜசோழன் இந்து இல்லையா, அவர் இந்து இல்லை என்றால் அவர் ஏன் சிவன் கோவில் கட்டினார் என கேள்வி எழுப்புகின்றனர். வெற்றிமாறனுக்கு ஆதரவாக  பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த நடிகர் கமலஹாசன் ராஜராஜ சோழன்  காலத்தில் இந்து மதம் என்ற ஒரு மதமே இல்லை.

இதையும் படியுங்கள்: "லயோலா எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும் பேர்வழிகளே.. ராஜராஜன் இந்து இல்லையா".? கொதிக்கும் ராமரவிக்குமார்.

சைவமும் வைணவமும் மட்டும்தான் இருந்தது என  வெற்றிமாறனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் இதே கருத்தை முன்வைத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- திமுக பொதுக்குழு என்பது ஐந்து ஆண்டுகள் ஒரு முறை நடைபெறுவது வழக்கம், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்தல்  நடைபெற உள்ளது.

அதேபோல் ராஜராஜசோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததாக வரலாறு இல்லை, சைவம் மற்றும் வைணவம் தான் இருந்தது. அதனால்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவார்கள். சைவ வைணவ போராட்டம் என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ராஜராஜ சோழன் சைவ மன்னன்தான், தென்னாடுடைய சிவனே என்று தான் கூறுவார்கள், ஆர்எஸ்எஸ் பேரணி எங்கெங்கு கலவரம் நடக்கிறது என்பதை புகைப்படம் எடுத்து நீங்கள் போடுங்கள், கலவரம் நடக்கவில்லை என்றால் அவர்கள் ஆர்எஸ்எஸ் இல்லை. கனிமொழிக்கு பதவி தருவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார். இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
 

click me!