திருச்சியில் அமைகிறது விளையாட்டு நகரம்.. செங்கல்பட்டில் இடம் கிடைக்காததால் மாற்றம்.. அமைச்சர் அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2022, 1:54 PM IST
Highlights

விளையாட்டு நகரம் அமைக்க சென்னையில் இடம் கிடைக்காதபோது திருச்சியில் இடம் தேர்வு செய்யப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு நகரம் அமைக்க சென்னையில் இடம் கிடைக்காதபோது திருச்சியில் இடம் தேர்வு செய்யப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அதேநேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசி உயர்வு போன்றவற்றை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:   தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு; சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்;- தமிழிசை சவுந்திரராஜன்

இது ஒரு புறம் உள்ள நிலையில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஈடுபட்டு வருகிறார்.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன் விவரம் பின்வருமாறு:- தமிழ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூட முடியும்.

இதையும் படியுங்கள்: மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் பாஜக ஒன்சைடு கேம்.. மத்திய அரசை டார் டாராக்கிய பிடிஆர்.

அவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளுக்கான உலகத் தரத்திலான விளையாட்டு கட்டமைப்பை உருவாக்கும் வகையில் சென்னை அருகே மிக பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என கடந்த  சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு நகரம்  அமைப்பதற்காக இடைத்தேர்வு செய்யும் பணிகள் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தும் இடம் தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளது.

எனவே சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்படும், தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப் பட்டியில் நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட உள்ளதாகவும், அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதை பயன்படுத்தி தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவார்கள் அவர் கூறினார். 
 

click me!