மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் பாஜக ஒன்சைடு கேம்.. மத்திய அரசை டார் டாராக்கிய பிடிஆர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2022, 1:17 PM IST
Highlights

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு படிப்படியாக நிதியை குறைத்து வருவதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பிடிஆர் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு படிப்படியாக நிதியை குறைத்து வருவதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பிடிஆர் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்று மட்டும் திறந்து வைத்துள்ளனர். ஆனால் மதுரையில் மட்டும் மருத்துவமனைக்கு பதிலாக செங்கல் மட்டுமே உள்ளது.

பொதுவாக மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் பிரதமரின் பெயரிலேயே நடத்துகிறது, இந்நிலையில் மாநில அரசுக்கு 60% மத்திய அரசின் பங்குகளுடன் செயல்படுத்தும் பல திட்டங்களுக்கு மத்திய அரசு படிப்படியாக நிதியை குறைத்து வருகிறது. ஜிஎஸ்டி தொடர்பாக முறையிட ஒவ்வொரு மாநிலத்திற்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவசியம், மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கூட்டங்களை நடத்த வேண்டியது அவசியம். ஜிஎஸ்டி கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். 

எய்ம்ஸ் மருத்துவமனை இரண்டில் ஒன்று கட்டி திறக்கப்பட உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் சுவர் கூட கட்டவில்லை, ஆனால் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒன்சைடு கேம்  விளையாடுவது போல தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.

 

உண்மையாகவே
95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.

அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது.

அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது.1/2 pic.twitter.com/oxT9S6wdyj

— Su Venkatesan MP (@SuVe4Madurai)

அதில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட அரசு மருத்துவமனையின் பணிகள்  95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அந்த மருத்துவமனையை தான் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார், அதேநேரத்தில் 2018ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை, அது பொட்டல் காடாக இருக்கிறது. இந்நிலையில் அந்தப் பொட்டல் காட்டை காட்டில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டது என ஜேபி நட்டா பேசுகிறார், ஜேபி நட்டா சொல்லும் 95 பணிகள் பிலாஸ்பூரில் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிய வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

click me!