தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு; சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்;- தமிழிசை சவுந்திரராஜன்

By Ajmal KhanFirst Published Oct 6, 2022, 1:27 PM IST
Highlights

புதுச்சேரியில் மின்துறை தொடர்பான பிரச்சினையில் எந்த போராட்டத்தாலும் பொதுமக்கள் பாதிக்ககூடாது என்பதால்  சுமூக பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திராரஜன் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் பட்டமளிப்பு  விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகதான் இருக்கிறது எனவும் இருளில் முழ்கவில்லை எனவும் தெரிவித்தார். 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல்  பாதிப்பு ஏற்பட்டதாகவும்,சிலர் செய்த பிரச்சினையால் மின் தடை ஏற்பட்ட நிலையில், மாற்று நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டதாக  குறிப்பிட்டார்.  தனியார் மயமாக்கல் என்றதும் மின்துறையை முழுவதுமாக கொடு்த்துவிடுவதாக சிலர் நினைத்து சமூக வலைதளங்களில் எழுதிவருவதாக தெரிவித்தார். பல துணைநிலை மாநிலங்களில் மின்துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும் எனவும் 24 மணி நேரமும் சிறப்பான செயல்பாடு இருக்கும் எனவும் கூறினார். மின் திருட்டு  தடுக்கப்படுவதால் சிலர் இந்த போராட்டங்களை தூண்டி இருக்கலாம் எனவும் தெரிவித்தார். இது தொடர்பான முடிவுகள் அனைத்தும்  முதல்வருடன் பேசித்தான் எடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்த அவர், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது கூட பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகதான் எனவும் கூறினார். அரசின் இந்த நடவடிக்கைகளை ஊழியர்களும் அதிகாரிகளும்  புரிந்து கொண்டு இருப்பார்கள் என தெரிவித்தார். மின்தடை பிரச்சினையால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது உண்மை எனவும்  உடனடியாக பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.

வெற்றிமாறன் பெரியாரின் பேரன்.. ராஜராஜன் விஷயத்தில் பாஜகவினரை பந்தாடிய திருமாவளவன்.

ஸ்டாலினுக்காக அப்போ வைகோ..! உதயநிதிக்காக இப்போ யார் தெரியுமா..? திமுகவை இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

ராஜ ராஜ சோழன்  குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன  கருத்துக்கு  கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு சிரித்த அவர், இதற்கு சிரிப்பதா என்ன செய்வது என தெரியவில்லை என்றார். மேலும் தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில்  அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர், கலாச்சார அடையாளங்களை மறைப்பதை, எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கபட்டு இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார். இந்து கலாச்சார  அடையாளத்தை தேவைக்காக திருப்பிக் கொண்டால் அதை ஏற்று கொள்ள முடியாது எனவும், தமிழர்களின்  அடையாளம் இறை வழிபாடு, சைவம்,வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் எனவும் தெரிவித்தார். இந்து அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர்.,ஆனால்  அடையாளங்களை மறைக்க  முற்பட்டால் அது சரியாக இருக்காது எனவும்  தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஸ்டாலினுக்காக அப்போ வைகோ..! உதயநிதிக்காக இப்போ யார் தெரியுமா..? திமுகவை இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

 

click me!