பிடிஆரிடம் காலையில் சவால்.. இரவில் சமாதானம்.. மதுரை சரவணனின் மர்ம முடிச்சு

Published : Aug 14, 2022, 10:16 AM IST
பிடிஆரிடம் காலையில் சவால்.. இரவில் சமாதானம்.. மதுரை சரவணனின் மர்ம முடிச்சு

சுருக்கம்

மதுரை மாவட்ட பாஐக தலைவரான டாக்டர் சரவணன் நேற்று காலை பிடிஆரை திட்டிய நிலையில், திடீரென இரவில் சந்தித்து மன்னிப்பு கேட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு

இருக்கிற கட்சியிலேயே, இருக்கின்ற மேடையிலே இங்கிருந்து எதிர் கட்சிக்கு மாறும்,தைரியமும் தன்னம்பிக்கையும் தனக்கு மட்டுமே உண்டு என நடிகர் வடிவேல் வண்டு முருகன் கதாப்பாரத்திரத்தில் பேசி கலக்கியிருப்பார். மேலும் தனது கட்சியில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மாற்று கட்சியில் இணைவதாகவும் கூறியிருப்பார். இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போல ஒரு சம்பவம் தான் தற்போது மதுரையில் நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில்  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 ராணுவ வீரர்கள்  உயிர் இழந்தனர். இதனையடுத்து நேற்று ராணுவ வீரரின் உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பி.டிஆருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  அப்போது நிதி அமைச்சர் பிடிஆர் கார் மீது பாஜகவின் மகளிர் அணியினர் செருப்பை வீசினர். 

பிடிஆர் ராஜினாமா செய்ய தயாரா.?

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் நேற்று மாலை விளக்கம் அளித்தார். அப்போது மாண்பற்ற அமைச்சர் பிடிஆர் பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது இங்க வர்றிங்க என கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது. ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பிடிஆர்க்கு என்ன தகுதி உள்ளது. உயிரிழந்த லெட்சுமணனுக்கு வைத்தியம் செய்துள்ளேன். அவர் குடும்பத்திற்கு என்னை தெரியும். திமுக கட்சியை வைத்து வெற்றி பெற்றவர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை. அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடட்டும். நானும்  போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம். தலைக்கனைம் பிடித்த அமைச்சர் பிடிஆர். நிதியமைச்சரை முதல்வர் பொறுப்பிலிருந்தே அகற்ற வேண்டும். பண்பாடு இல்லாத அமைச்சர் பிடிஆர் என விமர்சித்திருந்தார்.

பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு

பாஜகவில் இருந்து விலகல்

இப்படி கடுமையாக நிதி அமைச்சரை மதியம் விமர்சித்து இருந்த டாக்டர் சரவணன், திடீரென நேற்று இரவு பிடிஆரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுகொள்வதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன்,  ''நானும் பாஜக தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த போது வெளியே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வு நடந்து விட்டது. வீட்டிற்குப்போன பிறகு மன உறுத்தலாகவே இருந்ததாக தெரிவித்தார்.   'எந்த தகுதி' என அமைச்சர் கேட்பது இங்கிருக்கும் புரோட்டோகால் தொடர்பாக கேட்டுள்ளார்.  வீரரின் உடலை தமிழக அரசு சார்பாக  ரிசீவ் செய்து அவங்க ஊருக்கு அனுப்புகிறோம். அவங்க வீட்டில் போய் மரியாதை செலுத்தலாம், அவர்களது கிராமத்தில் போய் மரியாதை செலுத்தலாம் அந்த அர்த்தத்தில் அவர் சொல்லி இருக்கிறார். நிதி அமைச்சர் வெளிநாட்டில் படித்தவர் அதனால் அவருடைய தமிழ் தவறாக புரிந்து இருக்கிறது எனக்கு மத அரசியல், வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை என கூறினார். நான் இனி பாஜகவில் தொடர மாட்டேன் என தெரிவித்து இருந்தார். இந்த பேச்சு பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  நிதி அமைச்சர் பிடிஆரை மதியம் கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்த டாக்டர் சரவணன் இரவில் திடீரென மாறியது ஏன் என்று காரணம் புரியாமல் பாஜகவினர் குழம்பியுள்ளனர். அரசியில்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற வசனம் தான் அனைவரது நினைவுக்கும் வருகிறது.

இதையும் படியுங்கள்

செருப்பு வீச்சு சம்பவத்தை தூண்டியதே டாக்டர் சரவணன் தான்... பாஜக பகீர் குற்றச்சாட்டு

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S