செருப்பு வீச்சு சம்பவத்தை தூண்டியதே டாக்டர் சரவணன் தான்... பாஜக பகீர் குற்றச்சாட்டு

By Ajmal Khan  |  First Published Aug 14, 2022, 8:41 AM IST

ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில்,  மதுரையில் விரும்ப தகாத நிகழ்வை தூண்டியதே டாக்டர் சரவணன் தான் என பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 


அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு

ஜம்மு காஷ்மீரில்  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 ராணுவ வீரர்கள்  உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து உடல் அடக்கம் செய்வதற்காக நேற்று மதுரைக்கு ராணுவ வீரரின் உடல் கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்த தமிழக நிதி அமைச்சர் பி.டிஆர் வந்திருந்தார். அப்போது பாஜகவினரும் கூடியிருந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக மரியாதை செலுத்திய பின்பு மற்றவர்கள் மரியாதை செலுத்துங்கள் என கூறியதாக தகவல் வெளியானது. இதனால் திமுக- பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. அப்போது அருகில் இருந்த பாதுகாவலர்கள் கார் மீது விழுந்த செருப்பை அகற்றினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட திமுக

தமிழகம் முழுவதும் பாஜகவினருக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திடீரென பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், தமிழக நிதி அமைச்சர் பிடிஆரை அவரது இல்லத்தில் இரவு நேரத்தில் சந்தித்து பேசினார். அப்போது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக கூறினார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன்,  மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல என கூறினார். எனவே மனதில் உள்ள விஷயத்தை நிதிஅமைச்சரிடம் தெரிவித்தேன். பாஜகவை விட்டு விலகுகிறேன்,பாஜகவில் அரசியல் செய்ய விரும்பவில்லை, இன்று காலை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

 

நேற்று மதுரையில் நடந்த விரும்ப தகாத நிகழ்வை தூண்டியதே டாக்டர் சரவணன் தான்.

ஆதாயத்திற்காக மீண்டும் தி.மு.கவில் இணையும் 1 வருட கனவு மற்றும் மதுரை அமைச்சர் மூர்த்திக்கு எதிரான ஒருங்கிணைப்பையும் தனது அடிப்பொடிகளை வைத்து நேற்று மதுரையில் நாடகம் நடத்தி விட்டார் சரவணன். https://t.co/PFy9MzuHMR

— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar)

 

டாக்டர் சரவணன் தான் காரணம்

இந்தநிலையில் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவர்  சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேற்று மதுரையில் நடந்த விரும்ப தகாத நிகழ்வை தூண்டியதே டாக்டர் சரவணன் தான். ஆதாயத்திற்காக மீண்டும் தி.மு.கவில் இணையும் 1 வருட கனவு மற்றும் மதுரை அமைச்சர் மூர்த்திக்கு எதிரான ஒருங்கிணைப்பையும் தனது அடிப்பொடிகளை வைத்து நேற்று மதுரையில் நாடகம் நடத்தி விட்டார் சரவணன் என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவை விட்டு விலகுகிறேன்.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த டாக்டர் சரவணன்.. என்ன காரணம் தெரியுமா?

 

click me!