பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது.. அருவருக்கத்தக்கது.. கொதிக்கும் ஜோதிமணி..!

By vinoth kumarFirst Published Aug 14, 2022, 7:53 AM IST
Highlights

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். 

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு வந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் முதலில் மரியாதை செய்த பிறகே, பாஜகவினர் மரியாதை செய்ய வேண்டும் என அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதால் பாஜகவினர் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- சாக்கடை அரசியல் செய்பவர்கள் பற்றி பேச விரும்பவில்லை… பாஜகவை கடுமையாக விமர்சித்த பழனிவேல் தியாகராஜன்!!

அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது அங்கிருந்த பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண் தொண்டர் ஒருவர் காலணியை எடுத்து அமைச்சர் காரின் மீது வீசினர். அந்த காலணி, காரின் முன் கண்ணாடியில் விழுந்தது. சிலர் காரை கைகளால் ஓங்கி தட்டினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியைும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று ஜோதிமணி கூறியுள்ளார். 

அவர்களை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்கள். பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது. அறுவெறுக்கத்தக்கது. ஒரு மாநில அமைச்சரிடமே இவ்வளவு வன்முறையில் பாஜகவினர் ஈடுபடுவார்கள் என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?

— Jothimani (@jothims)

 

 

இதுதொடர்பாக ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில்;- தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்கள். பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது. அருவருக்கத்தக்கது. ஒரு மாநில அமைச்சரிடமே இவ்வளவு வன்முறையில் பாஜகவினர் ஈடுபடுவார்கள் என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?

தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று ஜோதிமணி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

click me!