நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட நிலையில் இரவு 12 மணிக்கு பாஜக நிர்வாகி சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட நிலையில் இரவு 12 மணிக்கு பாஜக நிர்வாகி சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அதில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் காஷ்மீரில் இருந்து நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த சென்றார்.
இதையும் படிங்க;- சாக்கடை அரசியல் செய்பவர்கள் பற்றி பேச விரும்பவில்லை… பாஜகவை கடுமையாக விமர்சித்த பழனிவேல் தியாகராஜன்!!
அப்போது அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால், அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். பாஜகவினரின் கூட்டத்தைப் பார்த்த அமைச்சர் பிடிஆர், இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும், பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுரையில் நடந்த சம்பவத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நள்ளிரவில் சந்தித்து மதுரை பாஜக தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன்;- பாஜகவில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு உள்ளது. இருப்பினும் மன உளைச்சலுடன் தான் பாஜகவில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு நேர்ந்த சம்பவத்தால் தூக்கம் வரவில்லை. அதனடிப்படையில் தான் இரவில் அவரை சந்தித்து என்னுடைய வருத்தத்தை தெரிவித்தேன். பாஜகவில் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. காலையில் என்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்ப போகிறேன். பாஜகவில் மத அரசியல் கடுமையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவான மருத்துவராகவே நான் இருக்க விரும்புகிறேன் என டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- பாஜகவை விட்டு விலகுகிறேன்.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த டாக்டர் சரவணன்.. என்ன காரணம் தெரியுமா?
இதனிடையே, பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன் என்று பிடிஆர் கூறியிருந்த நிலையில் அன்று நள்ளிரவே பாஜக நிர்வாகி சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இதற்கு தான் நாளை பேசுகிறேன் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதன் அர்த்தமா என கேள்வி எழுந்துள்ளது.