Namassivayam : யார் இந்த புதுவை வேட்பாளர் நமச்சிவாயம்.? திமுக தொடங்கி பாஜக வரை- 7 கட்சிக்கு பல்டி

By Ajmal Khan  |  First Published Apr 7, 2024, 2:17 PM IST

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த நமச்சிவாயம், கடந்த 2020ஆம் அண்டு அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். இதனைதொடர்ந்து உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர், தற்போது மக்களவை வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 
 


யார் இந்த நமச்சிவாயம்

நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் இலக்கை நிர்ணயித்து பாஜக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியது. அந்த வகையில் புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக உள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  கூட்டணியில் இருக்கும் பாஜக சீட்டை தன கட்சிக்கு தட்டிப்பறித்தது. இந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என தீவிரமாக ஆலோசனை நடத்தியது.

Tap to resize

Latest Videos

முதலில் தமிழிசை பெயர் அடிபட்டது. இதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இறுதியாக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இந்தநிலையில் யார் இந்த நமச்சிவாயம் என விசாரிக்கப்பட்டதில் புதுச்சேரியின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் இவர், பல கட்சிகளுக்கு சென்று தற்போது பாஜகவில் நம்பிக்கைக்குரிய நபராக இருப்பவர் தான் நமச்சிவாயம்.

நமச்சிவாயம் அரசியல் பயணம்

தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் தொடங்கிய நமச்சிவாயம், பின்னர் வைகோ மீது ஏற்பட்ட பற்று காரணமாக மதிமுகவிற்கு தாவினார். இதனை தொடர்ந்து மூப்பனார் தனியாக தொடங்கியதும் தமாகவிற்கு பல்டி அடித்தார். அங்கிருந்து  புதுவை காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர் மீண்டும் ஜி.கே.வாசன் தமாகவை தொடங்கிய போது அங்கு இணைந்தார். சில ஆண்டுகளிலேயே மீண்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர் கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.  நமச்சிவாயம் புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை அமைச்சராகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியில் இருந்தவர். 

புதுவை வேட்பாளர் நமச்சிவாயம் எத்தனை கட்சிதான் மாறுவார்.? லிஸ்ட்டை பார்த்தால் தலையே சுற்றுகிறது- மு.க ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியோடு மோதல்

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், நமச்சிவாயம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று புதுச்சேரி முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பிறகு அப்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் நமச்சிவாயம் அதிருப்தி அடைந்தார்.காங்கிரஸ் மேலிடம் சார்பாக நமச்சிவாயம் அமைதிப்படுத்தப்பட்டார்.

அமைச்சர் டூ மக்களவை வேட்பாளர்

சுமார் 4 ஆண்டுகள் அமைச்சர் பொறுப்பில் தொடர்ந்தவர்,2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனத்தை வைத்த அவர், பாஜகவில் இணைந்தார்.

என்ஆர் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசியல் வரலாற்றில் பாஜகவை சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் புதுச்சேரிக்கு யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற குழப்பம் பாஜக மத்தியில் ஏற்பட்ட நிலையில், அங்கு உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் பெயரை பாஜக டிக் செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்

kushboo : பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்..! திடீரென விலகிய நடிகை குஷ்பு- காரணம் என்ன.?

click me!