மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா.? வேட்புமனுவில் வெளியான தகவல்

By Ajmal KhanFirst Published Mar 26, 2024, 9:37 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்களின் சொத்து பட்டியில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சூடு பிடிக்கும் தேர்தல் களம்- வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்புமனு  தாக்கலானது தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து நேற்றைய தினம் பங்குனி உத்திரம் என்பதாலும் நல்ல நாள் என்பதாலும் 300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தமிழக முழுவதும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதில் தங்களுடைய சொத்து பட்டியலையும் அந்த வேட்பாளர் இணைத்துள்ளனர்.  இதனை அடுத்து தேர்தல் ஆணையம் சார்பாக வேட்பாளர்கள் சொத்து பட்டியல் குற்ற விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

எல்.முருகன் சொத்து மதிப்பு என்ன.?

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், இந்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பையும் இணைத்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், என் முருகன் வங்கி கணக்கு, தங்க நகைகள், எல்.ஐ.சி பாலிசி உள்ளிட்ட 1 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 88 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார். 

மேலும் எல். முருகன் தனது  பெயரில் 69 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் தனது  மனைவி பெயரில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் அசையா சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது  பெயரில் 20 லட்ச ரூபாயும், அவரது மனைவி பெயரில் 1 கோடி ரூபாய் வங்கி கடனும் இருப்பதாக வேட்புமனுவில் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு.?

பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது பெயரில் 12 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் தனது மனைவி பெயரில் 12 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் 1.91 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும், தனது மனைவி பெயரில் 5.98 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

தனக்கு 2. 61 லட்சம் கடனும், மனைவிக்கு 2.52 கோடி கடனும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  குறிப்பாக நயினார் நாகேந்திரனிடம் 240 பவுன் நகைகளும், அவரது மனைவியிடம் 560 பவுன் நகைகளும்  உள்ளதாகவும் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இரண்டு மாநில ஆளுநராக இருந்த தமிழிசைக்கு கார் இல்லையா.? சொத்து மதிப்பு என்ன தெரியுமா.? வெளியான பட்டியல் இதோ

click me!